Sunday, December 23, 2007

திருமணமாம் திருமணம்

........காலை மணி 6:40, கல்யாண மன்டபமே களை கட்டியிருந்தது, 7:30 - 9:00 முகூர்த்தம்.. உறவினர், நன்பர்கள் உள்ளே வந்த வண்ணம் இருந்தனர். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புக்கு வந்து மண்டபத்தின் அறைகளில் தங்கிய நெருங்கிய சொந்தங்கள், ஆடை அலங்காரங்களில் முழ்கி இருந்தனர்..

------

தன் அறையில் மணமகள் வித்யா, சற்றே கலங்கிய விழிகளோடும், கனத்த இதயத்தோடும் படித்துக்கொண்டிருந்தாள். அன்புள்ள அம்மா, அப்பா, இன்னும் சில மனித்துளிகளில் எனக்கு வேறொருவருடன் திருமணம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆசை ஆசையாய் காதலித்த உங்களின் அண்ணன் மகன் , எனது முறை மாமன் சங்கர் மாமாவை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய எனக்கு மனமில்லை. நீண்ட நாள் குடும்ப பகை காரணம் காட்டி அப்பா நிச்சயம் எங்கள் காதலை ஏற்க மாட்டார் என்பதால் இது வரை அவரிடமும் சொல்லவில்லை..

-----
மனமேடை அலங்காரம் முடிந்து முகுர்த்ததுக்கு தயாராக இருந்தது..
மாப்பில்லையை கூட்டிட்டு வாங்கோ, ஐயர் குரல் கொடுத்த்தார், மாப்பிள்ளை வந்ததும், சில சம்பிரதாயம் முடித்து, கூரை வேட்டி சட்டையை கொடுத்து மாற்றி வரச்சொல்லி அனுப்பினார் ஐயர்..
அனைவரின் முகத்திலும் அளவற்ற மகிழ்ச்சி.. வாண்டுகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருக்க, உற்றார் உறவினர்கள் ஆங்காங்கே குழு குழுவாக அமர்ந்து சந்தோஷ அரட்டை நடத்திக்கொன்டிருந்தார்கள்.
வித்யாவின் தாய் தந்தை முகத்தில் அப்படி ஒரு சந்தோசம், இருக்காதா பின்னே.. தங்களின் ஒரே செல்ல மகளின் திருமணம் வெகு சிறப்பாக இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போகிறதே...


----

வித்யா சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொன்டு, மீன்டும் தொடர்ந்தாள்..
.. அப்பாவுக்கு பயந்து நீயும் என் காதலை எதிர்ப்பாய் என்பதால் தான் அம்மா உன்னிடம் கூட நான் இது பற்றி வாய் திறக்கவில்லை..மன்னித்து விடும்மா.. அப்பாவை எதிர்க்கவும் முடியவில்லை, 5 வருடம் காதலித்த மாமவை விட்டு வேறொருவரை திருமணம் செய்யவும் மனது வரவில்லை.. ஆகவே என் உயிரை.....

----- -----------

என்னடி அது ... அம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் வித்யா..

அம்மா .. அது..... வாய் குழறினாள்..

ஒரு பத்து நிமிஷம் விட்டுட்டு போனா போதும், உடனே அந்த பாழான போன கத புஸ்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிசுடுரே.. இன்னைக்கு ஒரு நாளாச்சும் படிக்கறதை நிறுத்தக்கூடாதா.... பாவம்டீ உன் மாமன்.. உனக்கு கத புஸ்த்தகம் வாங்கிக்கொடுத்தே ஏழையா போயிடுவான்.. சொல்லிக்கொண்டே வித்யாவின் கையில் இருந்த அந்த நாவலை பிடுங்கினாள்.

அம்மா அம்மா.. கடைசி பக்கம் வந்துட்டேன் மா... இன்னும் என்னை கூப்பிட 10 நிமிசம் இருக்குதுமா.. அதுக்குள்ளே படிச்சுடுறேன்மா...கெஞ்சினாள் வித்யா.. வாக்குவாதம் நடக்கும் போதே, கல்யாண பொண்ணை கூட்டிண்டு வாங்கோ.. ஐயர் குரல் கேட்டது....

தான் படித்த கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று எண்ணத்துடன், தன் ஆசை முறை மாமன் சுகுமாரை மணந்துகொள்ள மனம் நிறைந்த சந்தோஷத்துடன் மணமேடை நோக்கி மெள்ள நடந்தாள் வித்யா..

6 comments:

SurveySan said...

;) நல்லா இருந்தது.

Nithi said...

சாதாரணமான கதை கரு

MyFriend said...

interesting. :)

bala said...

முண்டம் வாக்காளன்,
கதை கேவலாமாக இருந்தது;தயவு செய்து கதை எழுதுவதை நிறுத்தவும்.

பாலா

வெற்றி said...

வாக்காளனுக்கு எனது ஓட்டு.
நல்லா இருக்கு.

Several tips said...

விறுவிறுப்பான சுவையான சிறு அல்ல அல்ல குறுங்கதை.