காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் என்ற வினவு அவர்களின் கருத்துப்படத்திற்கு வினோத், கின்டி என்பவர் போட்டிருந்த கருத்தும், அதற்கு ஆர் வி போட்ட எதிர்கருத்தும், தொகுக்கப்பட்டுள்ளது..
வினோத் கருத்து நியாயமாக படுகிறது.. நானும் ஆரம்பத்தில் போலிஸ் அராஜகம் என்றே பேசினேன்.. யோசித்தால், அனைவரும் போலிஸ் அராஜகம் என்று பேசும் அவசரத்தில் வக்கீல்கள் அரஜாகத்தை மறந்துவிட்டோமா அல்லது தெரிந்தே விட்டோமா என தெரியவில்லை.. !
முத்து என்பவர் கருத்தும் இதே தொனியில் இருப்பதால் அதையும் சேர்த்துள்ளேன்.
வினோத், கின்டி., மேல் பெப்ரவரி 23ர்ட், 2009 இல் 16:01 சொன்னார்: ரவுடி வக்கீல்கள் நிலை இது தான்.. 2 வாரங்களுக்கு முன் ஈழத்தமிழருக்காக சாலை மறியல் செய்தனர் வக்கீல்கள்.. சைதாப்பேட்டை கோர்ட் எதிரில்.. ஒரு 12 - 14 வக்கீல்கள்..சரசரவென சாலை குறுக்கே வேகமாக சாலைக்கு வந்து மறித்த்தார்கள்.. யாருக்கு தெரியும் இவர்கள் இப்படி வருவார்கள் என்று.. அந்த வழியே டீ வி எஸ் 50 ல் வந்த ஒருவர் அவசர அவசரமாக ப்ரேக் அடித்தும்.. இவர்களை தள்ளி 1 - 1.5 அடி சென்று வன்டி நின்றது.. நம் அருமை வக்கீல் ஒருவர் என்ன திருவாய் அருளினார் தெரியுமா?? டே தே....பையா.. ஓ.. .. தமிழனுக்கு நாங்கள் கஷ்டபடுறோம்.. நீ என்ன ஊம்....துக்கு இவ்ளோ அவசரம்.. இது அப்படியே அவர் சொன்ன வார்த்தை.. கத்தி நடுரோட்டில்.. இன்னொரு வக்கீல்.. கையில் இருந்தகட்டையை ஓங்கி ஒரு காரின் கண்ணாடியில் அடிப்பது போன்ற பாசாங்கு செய்தார் நாக்கை கடித்துக்கொண்டு… வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே.. ஒருவர் வந்து 4 பக்கமும் இருந்து தன் டிஜிட்டல் காமிராவில் படம் பிடித்தவுடன் , கலைந்து சென்று விட்டனர்.. அந்த ஒரு புகைப்படம் எடுத்து பத்திரிக்கையில் வரவேண்டும் என்று இந்த வக்கீல்கள் காட்டிய தமிழ் உணர்விற்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல மற்றவர்களின் தமிழ் உணர்வு
வினோத், கின்டி., மேல் பெப்ரவரி 23ர்ட், 2009 இல் 16:02 சொன்னார்:
please add that wolf face to one of the lawyers and put it both police and lawyers should have that wolf face
Muthu, மேல் பெப்ரவரி 20த், 2009 இல் 13:45 சொன்னார்:
வினவு, போலிஸ் நடத்தியது காட்டுமிராண்டித்தாக்குதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. அதே நேரத்தில் சுப்புரமனியசாமியின் பெயர் இதில் இருக்கிறது என்பதற்காகவே, வக்கீல்களுக்கு வக்காலத்து வாங்குவது என்ன நியாயம்.. வக்கீல்களை புனிதப்பசுக்களாக சித்தரிப்பது ஏன்?
வக்கீல்கள் சளைத்தவர்களா?? எந்த ஒரு போராட்டத்தை சட்டம் மெத்த படித்த வக்கீல்கள் ஜனநாயக முறைப்படி நடத்தினார்கள்.. ஈழத்துக்கான போராட்டத்தில் கூட பல இடங்களில் வக்கீல்கள் பல இடங்களில் அராஜகம் செய்தது தெரிந்த விஷயம்.. வக்கீல்கள் / சட்டக்கல்லூரி மானவர்கள் போராட்டம் என்றாலே அராஜகம் , அடிதடி என்றாகிவிட்டது.. சட்டம் படித்த ஒரே காரணத்திற்கா பல இடங்களில் அவர்கள் முறைகேடாக நடப்பது கண்கூடு..
காக்கிகள் , ரவுடிகளுக்கு இனையாக பல நேரங்களில் , பல இடங்களில் வக்கீல்கள் குண்டர் படைபோல் செயல்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே..
காசுக்காக, பல ரவுடிகளுக்கு ஆதரவாக வாதாடி வெற்றிபெற்று , விடுதலை வாங்கித்தருவதும் இந்த வக்கீல்கள் தான்..
சுப்பிரமனியசாமி மீது முட்டையடி என்பது வரவேற்கத்தக்கது.. அதற்காக அதை எதேச்சை என்று சொல்லாவேண்டாம்.. அது திட்டமிட்ட செயல் தான்.. அதில் தவறும் இல்லை.
வினோத், கின்டி., மேல் பெப்ரவரி 24த், 2009 இல் 12:22 சொன்னார்:
காவல்துறைக்கு இனையாக பேயாட்டம் ஆடிய வக்கீல்களுக்கும் ஓநாயகளின்
முகமூடி பொருந்தும்.. அதை போட மனது வராதது ஏன்?
மக இக , புஜ இ க விற்கு எந்த பக்கம் தவறிருந்தாலும் போலீஸ் மீது குற்றம்சாட்டிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருப்பதாலா??
காவல்துறை ஓநாய் என்றால், அதற்கு சளைத்ததல்ல வக்கீல் விச ஓநாய்கள்
================
RV, மேல் பெப்ரவரி 24த், 2009 இல் 12:28 சொன்னார்:
வினோத், வினவு சொல்வது உங்களுக்கு தவறாக படலாம். நீங்கள் தாராளமாக வக்கீல்களுக்கு ஓநாய் என்ன, கரடி, சிங்கம், புலி, டைனோசார் முகமூடி போட்டு ஒரு கார்ட்டூனை உருவாக்கி பதியுங்கள்.
ஆனால் ஒரு கார்ட்டுனுக்காக ஜாமீனில் கூட வெளி வராதபடி கைது என்பது அநியாயம். அதை கண்டிக்க மறவாதீர்கள்.
========================
வினோத், கின்டி.,, மேல் பெப்ரவரி 24த், 2009 இல் 17:37 சொன்னார்:
ஆர் வி, வினவு சொல்வது எனக்கு தவறாக படவேயில்லை.. போலீசின் அராஜகம் கண்டிக்கத்தக்கது.. இன்றைய இந்த கைது உட்பட , அன்று நீதிமன்றத்தில் அவர்கள் நடந்துக்கொண்டது வரை. அதில் எந்த சந்தேகமும் இல்லை..காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் என்ற ஒரே காரணத்துக்காக வக்கீல்களின் காட்டுமிராண்டிதனத்தை நியாயப்படுத்திட முடியுமா? சொல்லுங்கள் ஆர் வி.
வினவின் இந்த கார்டூன் போடப்பட்ட ஒரிஜினில் பதிவில் என் கருத்தை பாருங்கள்..
புஜ இக, மக இக என்ற அமைப்புகள், காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் என கூட்டம் போட்டு கண்டிக்கும் அதே வேளையில் ஓரிடத்திலாவது வக்கீல்கள்காட்டுமிராண்டித்தனம் பற்றி பேசியதா என்று சொல்லுங்கள்..
இரண்டு பிரிவினரும் தவறு செய்திருக்கும் போது, ஒரு பிரிவினரை எதிர்த்தும் , ஒரு பிரிவினரை நியாயபடுத்தியும் கார்டூன் போட்டு தானே பிரச்சாரம் செய்யும் மனநிலையில் இருக்கிறோம்.. என்பது தான் கேட்டேன்
போலிசை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்கிறேன் , அதே அளவு வக்கீல்களும் காட்டுமிராண்டிகள் தானே.?
இப்போது உங்களால் சொல்லமுடியுமா? வக்கீல்களும் ஓநாய்கள் என்று?? அல்லது வினவு தான் ஒரு கருத்துப்படம் போடுவாரா?
யோசியுங்கள் ஆர் வி.. தவறென்றால் சொல்லுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்களது கருத்து என்ன
இப்படி சொல்லலாமா.... போலீசைக் குறை சொல்பவர்கள் வக்கீலையும் குறை சொன்னால்தான் அவர்கள் ஜனநாயக பாதையில் பயணிப்பவர்கள்... இதுதானே உங்களது வாதத்தின் மையக்கரு...இது லாஜிக் ஆக சரி என பட்டால் அது எப்படி எனச் சொல்லுங்கள் பேசுவோம்...
வினோத்
வக்கீல்களோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரோ சொக்கத் தங்கமா இல்லையா என்ற விவாதத்தை ஈழம் பற்றி வாயைத்திறக்காத அல்லது உங்கள் வார்த்தையில் சொல்வதென்றால் ஒரு போட்டோ எடுப்பதற்காக போராட்டத்தில் ஈடுபடும் வக்கீல், மாணவர்களில் இல்லாத எவரும் பேசுகின்றார் என்றால் அவர் மாபெரும் எத்தராகவோ வாய்ச் சொல் வீரராகவோ அல்லது சொற்புரட்டராகவோதான் இருக்க முடியும். இதனை நான் சொன்னதாக நினைத்து விடாதீர்கள். இது போன்ற அடையாளப் போராட்டங்களில் ஆரம்பித்து ஒரு நாட்டின் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட ஒருவர் சொன்னது.
இது ஏன் உங்களுக்கு புரியவில்லை என்றால், அரசியலற்ற விவாதம் செய்ய உங்களைப் பழக்கி உள்ளார்கள். வன்முறை, போர், தெருச்சண்டை, ஆர்ப்பாட்டம் இவற்றை ஆளுபவர்கள் நட்த்துவதற்கும் ஆளப்படுபவர்களில் உள்ள ஜனநாயக சக்திகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் உங்களது கண்களில் அதனால்தான் படுவதில்லை. ஏனென்றால் இதனால் ஏற்படும் நேரடி பாதிப்பு ஏதும் உங்களை தாக்கவில்லை. ஆனால் இனித் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் இப்படி பொத்தாம் பொதுவாக எல்லோரையும் அகிம்சைக்கு திரும்ப சொல்கின்றீர்கள்.
நடைமுறையில் அதனை உங்களது எதிரியான ஆளும்வர்க்கம்தான் தீர்மானிப்பான். ஒன்றுமில்லை. ஈழப்பிரச்சினை அனைவரும் அறிந்த இன்றைய செய்தி. நாம் ஒரு போராட்டத்தை அதாவது அகிம்சை வழியில் முன்வைப்போம். அதாவது மத்திய மாநில அரசுகளின் ஆட்சி நமது சமூகத்தில் செல்லாது என்ற அரசியல் போராட்டம். அதாவது ஏறக்குறைய காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டம் ... இதை நாம் செய்ய ஆரம்பித்த அடுத்த நொடி நமக்கு வழக்கறிஞர்கள் பட்டதை விட பத்து மடங்காவது அதிகமான அடியை ராணுவமே இறங்கி அடிக்கும். இது நடக்காதுன்னு நீங்க நினைக்கின்றீர்களா... அப்படி என்றால் அதற்கும் உதாரணம் தருகிறேன்.....
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Post a Comment