Friday, May 15, 2009

பா ம க வாஷ் அவுட்

பா ம க வாஷ் அவுட் ஆகவேண்டும் என்பது பலரும் எதிர்பார்த்த ஒன்று நிறைவேற போகிறது.. 7 தொகுதிகள் தற்போதைய நிலவரப்படி ஒன்றில் கூட வெற்றிப்பெறுவது கடினம் என தெரிகிறது.. ராமாதாசின் சந்தர்ப்பவாதம், கோமாளித்தனம் , ஏமாற்றுவித்தைக்கு தமிழக மக்கள் கொடுத்த சாட்டை அடியாக இது உள்ளது
ராமாதாசின் வாய் இனிமேலாவது அடங்குமா????????

Tuesday, February 24, 2009

வக்கீல்கள் நியாயவாதிகளா?? வினவு - வினோத்- முத்து - RV

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் என்ற வினவு அவர்களின் கருத்துப்படத்திற்கு வினோத், கின்டி என்பவர் போட்டிருந்த கருத்தும், அதற்கு ஆர் வி போட்ட எதிர்கருத்தும், தொகுக்கப்பட்டுள்ளது..

வினோத் கருத்து நியாயமாக படுகிறது.. நானும் ஆரம்பத்தில் போலிஸ் அராஜகம் என்றே பேசினேன்.. யோசித்தால், அனைவரும் போலிஸ் அராஜகம் என்று பேசும் அவசரத்தில் வக்கீல்கள் அரஜாகத்தை மறந்துவிட்டோமா அல்லது தெரிந்தே விட்டோமா என தெரியவில்லை.. !

முத்து என்பவர் கருத்தும் இதே தொனியில் இருப்பதால் அதையும் சேர்த்துள்ளேன்.

வினோத், கின்டி., மேல் பெப்ரவரி 23ர்ட், 2009 இல் 16:01 சொன்னார்: ரவுடி வக்கீல்கள் நிலை இது தான்.. 2 வாரங்களுக்கு முன் ஈழத்தமிழருக்காக சாலை மறியல் செய்தனர் வக்கீல்கள்.. சைதாப்பேட்டை கோர்ட் எதிரில்.. ஒரு 12 - 14 வக்கீல்கள்..சரசரவென சாலை குறுக்கே வேகமாக சாலைக்கு வந்து மறித்த்தார்கள்.. யாருக்கு தெரியும் இவர்கள் இப்படி வருவார்கள் என்று.. அந்த வழியே டீ வி எஸ் 50 ல் வந்த ஒருவர் அவசர அவசரமாக ப்ரேக் அடித்தும்.. இவர்களை தள்ளி 1 - 1.5 அடி சென்று வன்டி நின்றது.. நம் அருமை வக்கீல் ஒருவர் என்ன திருவாய் அருளினார் தெரியுமா?? டே தே....பையா.. ஓ.. .. தமிழனுக்கு நாங்கள் கஷ்டபடுறோம்.. நீ என்ன ஊம்....துக்கு இவ்ளோ அவசரம்.. இது அப்படியே அவர் சொன்ன வார்த்தை.. கத்தி நடுரோட்டில்.. இன்னொரு வக்கீல்.. கையில் இருந்தகட்டையை ஓங்கி ஒரு காரின் கண்ணாடியில் அடிப்பது போன்ற பாசாங்கு செய்தார் நாக்கை கடித்துக்கொண்டு… வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே.. ஒருவர் வந்து 4 பக்கமும் இருந்து தன் டிஜிட்டல் காமிராவில் படம் பிடித்தவுடன் , கலைந்து சென்று விட்டனர்.. அந்த ஒரு புகைப்படம் எடுத்து பத்திரிக்கையில் வரவேண்டும் என்று இந்த வக்கீல்கள் காட்டிய தமிழ் உணர்விற்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல மற்றவர்களின் தமிழ் உணர்வு

வினோத், கின்டி., மேல் பெப்ரவரி 23ர்ட், 2009 இல் 16:02 சொன்னார்:
please add that wolf face to one of the lawyers and put it both police and lawyers should have that wolf face

Muthu, மேல் பெப்ரவரி 20த், 2009 இல் 13:45 சொன்னார்:

வினவு, போலிஸ் நடத்தியது காட்டுமிராண்டித்தாக்குதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. அதே நேரத்தில் சுப்புரமனியசாமியின் பெயர் இதில் இருக்கிறது என்பதற்காகவே, வக்கீல்களுக்கு வக்காலத்து வாங்குவது என்ன நியாயம்.. வக்கீல்களை புனிதப்பசுக்களாக சித்தரிப்பது ஏன்?
வக்கீல்கள் சளைத்தவர்களா?? எந்த ஒரு போராட்டத்தை சட்டம் மெத்த படித்த வக்கீல்கள் ஜனநாயக முறைப்படி நடத்தினார்கள்.. ஈழத்துக்கான போராட்டத்தில் கூட பல இடங்களில் வக்கீல்கள் பல இடங்களில் அராஜகம் செய்தது தெரிந்த விஷயம்.. வக்கீல்கள் / சட்டக்கல்லூரி மானவர்கள் போராட்டம் என்றாலே அராஜகம் , அடிதடி என்றாகிவிட்டது.. சட்டம் படித்த ஒரே காரணத்திற்கா பல இடங்களில் அவர்கள் முறைகேடாக நடப்பது கண்கூடு..

காக்கிகள் , ரவுடிகளுக்கு இனையாக பல நேரங்களில் , பல இடங்களில் வக்கீல்கள் குண்டர் படைபோல் செயல்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே..
காசுக்காக, பல ரவுடிகளுக்கு ஆதரவாக வாதாடி வெற்றிபெற்று , விடுதலை வாங்கித்தருவதும் இந்த வக்கீல்கள் தான்..
சுப்பிரமனியசாமி மீது முட்டையடி என்பது வரவேற்கத்தக்கது.. அதற்காக அதை எதேச்சை என்று சொல்லாவேண்டாம்.. அது திட்டமிட்ட செயல் தான்.. அதில் தவறும் இல்லை.



வினோத், கின்டி., மேல் பெப்ரவரி 24த், 2009 இல் 12:22 சொன்னார்:

காவல்துறைக்கு இனையாக பேயாட்டம் ஆடிய வக்கீல்களுக்கும் ஓநாயகளின்
முகமூடி பொருந்தும்.. அதை போட மனது வராதது ஏன்?
மக இக , புஜ இ க விற்கு எந்த பக்கம் தவறிருந்தாலும் போலீஸ் மீது குற்றம்சாட்டிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருப்பதாலா??
காவல்துறை ஓநாய் என்றால், அதற்கு சளைத்ததல்ல வக்கீல் விச ஓநாய்கள்
================

RV, மேல் பெப்ரவரி 24த், 2009 இல் 12:28 சொன்னார்:

வினோத், வினவு சொல்வது உங்களுக்கு தவறாக படலாம். நீங்கள் தாராளமாக வக்கீல்களுக்கு ஓநாய் என்ன, கரடி, சிங்கம், புலி, டைனோசார் முகமூடி போட்டு ஒரு கார்ட்டூனை உருவாக்கி பதியுங்கள்.
ஆனால் ஒரு கார்ட்டுனுக்காக ஜாமீனில் கூட வெளி வராதபடி கைது என்பது அநியாயம். அதை கண்டிக்க மறவாதீர்கள்.
========================

வினோத், கின்டி.,, மேல் பெப்ரவரி 24த், 2009 இல் 17:37 சொன்னார்:

ஆர் வி, வினவு சொல்வது எனக்கு தவறாக படவேயில்லை.. போலீசின் அராஜகம் கண்டிக்கத்தக்கது.. இன்றைய இந்த கைது உட்பட , அன்று நீதிமன்றத்தில் அவர்கள் நடந்துக்கொண்டது வரை. அதில் எந்த சந்தேகமும் இல்லை..காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் என்ற ஒரே காரணத்துக்காக வக்கீல்களின் காட்டுமிராண்டிதனத்தை நியாயப்படுத்திட முடியுமா? சொல்லுங்கள் ஆர் வி.

வினவின் இந்த கார்டூன் போடப்பட்ட ஒரிஜினில் பதிவில் என் கருத்தை பாருங்கள்..

புஜ இக, மக இக என்ற அமைப்புகள், காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் என கூட்டம் போட்டு கண்டிக்கும் அதே வேளையில் ஓரிடத்திலாவது வக்கீல்கள்காட்டுமிராண்டித்தனம் பற்றி பேசியதா என்று சொல்லுங்கள்..
இரண்டு பிரிவினரும் தவறு செய்திருக்கும் போது, ஒரு பிரிவினரை எதிர்த்தும் , ஒரு பிரிவினரை நியாயபடுத்தியும் கார்டூன் போட்டு தானே பிரச்சாரம் செய்யும் மனநிலையில் இருக்கிறோம்.. என்பது தான் கேட்டேன்
போலிசை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்கிறேன் , அதே அளவு வக்கீல்களும் காட்டுமிராண்டிகள் தானே.?
இப்போது உங்களால் சொல்லமுடியுமா? வக்கீல்களும் ஓநாய்கள் என்று?? அல்லது வினவு தான் ஒரு கருத்துப்படம் போடுவாரா?

யோசியுங்கள் ஆர் வி.. தவறென்றால் சொல்லுங்கள்

Monday, February 9, 2009

வைகோ பாவம் சார்.

கருணாநிதி அனைவரும் ஒன்று சேர்ந்து போரடலாம், குறிப்பாக அ தி மு க , ம தி மு க வும் இனையவேண்டும் என்று 2 நாட்களுக்கு முன் ஒரு அறிக்கை விட்டார் (வழக்கம் போல், கலைஞரின் வார்த்தை விளையாட்டு அறிக்கை தான்), உண்மையிலே கூப்பிட்டது போல தெரியவில்லை, நானும் கூப்பிடுகிறேன் என்ற அளவில் கூப்பிட்டு வைத்தார்.

நான் நீ என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்று வசனம் எழுதி அனைத்து பேருந்துக்களிலும் ஒட்டி வைக்க சொல்லிவிட்டு இப்படி கூட கூப்பிடவில்லை என்றால் எப்படி;..

அந்த அறிக்கைக்கு அம்மாவையும் முந்திக்கொண்டு வைகோவிடம் இருந்து அறிக்கை வந்தது.. எப்படி ஒட்ட முடியும். மத்திய காங்கிரஸ் அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்துகிறது, இலங்கைக்கு உதவுகிறது, அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் தி மு கவோடு எப்படி இணங்கிப்போக முடியும் என்று ஒரு அறிக்கைவிட்டுள்ளார்.. இந்த அழைப்பு நிராகரிக்கப்படுகிறது. என்பது போல பதிலளித்துள்ளார்..

நான் கூட ம தி மு க வின் நிலையை தெளிவுப்படுத்தி அறிக்கை என்று பார்த்தால் , அவர் தெளிவாக அ தி மு க விற்கு கருணாநிதி கொடுத்த அழைப்பை பற்றித்தான் அதிகம் தன் அறிக்கையில் பேசியிருக்கிறார்.. அய்யோ அய்யோ..

அதி மு க கூட ரொம்ப ஒன்றிவிட்டாரோ.. ஒரு வேளை ம தி மு க , அ தி மு க வின் கிளைக்கழகமோ???

இல்லை.. எங்கே கருணாநிதி அழைப்பை ஏற்று ஒரு வேளை ஜெ சரியென்றால்., இவர் நிலை திருசங்கு நிலை ஆகிடுமோ என அ தி மு க வுக்கும் சேர்த்து இவரே பதிலளித்துவிட்டாரோ??

சரி, இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு நிர்பந்திக்காத காங்கிரஸுடன் கருணாநிதி கூட்டணியில் இருக்கிறார்.. இவரின் இந்த ஆதங்கம் புரிகிறது.. கருணாநிதி ஓட்டரசியல் செய்கிறார்.

ஆனால்

"போர் என்றால் அப்படித்தான் இழப்பு இருக்கும்"
"இலங்கை ராணுவம் ஒன்றும் தமிழர்களை கொல்லவில்லை",
"புலிகள் தான் தமிழர் சாவுக்கு காரணம்".
"புலிகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்"

என்று அறிக்கை கொடுக்கும் ஜெ விற்கு பக்க பலமாக இவர் இருந்துக்கொண்டு, ஜெ வின் அறிக்கைக்கு ஒரு மறுப்பு கூட தெரிவிக்காமல், உண்மையான உணர்விருந்தும் ஓட்டு அரசியலுக்காக ஜெ வுடன் ஒட்டுண்ணியாக இருக்கும் இவர் மற்றவர்களின் நிலை பற்றி பேச என்ன இருக்கிறது..?

Friday, January 30, 2009

48 மனி நேரம் போர் நிறுத்தம் - அப்பாவி தமிழரை காப்பாற்ற நல்ல வாய்ப்பா?

48 மனி நேரம் போர் நிறுத்ததை அறிவித்துள்ளது இலங்கை..

புலிகள் இதை பயன்படுத்தி , தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பு பகுதிக்கு அனுப்பிவிட்டு.
தங்கள் பலங்கொண்ட மட்டும் இலங்கை ராணுவத்துடன் மோதி , இலங்கை ராணுவத்தை சின்னபின்னப்படுத்தாலமே. இலங்கை ரானுவம் பலவீனப்பட்டால், வேறு வழியின்றி போரை நிறுத்திட இலங்கை முன்வருமே.

நாமும் அப்பாவி தமிழர் கொல்லப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கலாமே. தமிழர்களை பாதுகாப்பாக அனுப்பிவிட்டு போரிட்டால், நம் கோரிக்கையான அப்பவி தமிழ்ர் பாதுகாப்பு நிறைவேறுமே


இதில் இருக்கும் சாதக / பாதகம் என்ன??


உடனே என்னை விபுலிகள், தமிழருக்கு எதிர்ப்பு என்ற சொல்லவேண்டாம்... அப்படி நினைப்பவர்கள் தயவு செய்து எதுவும் சொல்லவேண்டாம்..

இந்த விஷயத்தில் அவ்வளவு தெளிவில்லாத என் போன்ற தமிழனின் மனதில் தோன்றும் ஒரு கேள்வி இது .

இந்த விஷயத்தில் நல்ல தெளிவுள்ளவர்களுக்கு மட்டுமே இப்படி செய்வதால் வரும் பாதிப்புகள் பற்றி தெளிவாக தெரியும்.. அதை விவாதித்து புரிந்துக்கொள்ளவே இந்த பதிவு..

நன்றீ

Sunday, December 23, 2007

திருமணமாம் திருமணம்

........காலை மணி 6:40, கல்யாண மன்டபமே களை கட்டியிருந்தது, 7:30 - 9:00 முகூர்த்தம்.. உறவினர், நன்பர்கள் உள்ளே வந்த வண்ணம் இருந்தனர். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புக்கு வந்து மண்டபத்தின் அறைகளில் தங்கிய நெருங்கிய சொந்தங்கள், ஆடை அலங்காரங்களில் முழ்கி இருந்தனர்..

------

தன் அறையில் மணமகள் வித்யா, சற்றே கலங்கிய விழிகளோடும், கனத்த இதயத்தோடும் படித்துக்கொண்டிருந்தாள். அன்புள்ள அம்மா, அப்பா, இன்னும் சில மனித்துளிகளில் எனக்கு வேறொருவருடன் திருமணம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆசை ஆசையாய் காதலித்த உங்களின் அண்ணன் மகன் , எனது முறை மாமன் சங்கர் மாமாவை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய எனக்கு மனமில்லை. நீண்ட நாள் குடும்ப பகை காரணம் காட்டி அப்பா நிச்சயம் எங்கள் காதலை ஏற்க மாட்டார் என்பதால் இது வரை அவரிடமும் சொல்லவில்லை..

-----
மனமேடை அலங்காரம் முடிந்து முகுர்த்ததுக்கு தயாராக இருந்தது..
மாப்பில்லையை கூட்டிட்டு வாங்கோ, ஐயர் குரல் கொடுத்த்தார், மாப்பிள்ளை வந்ததும், சில சம்பிரதாயம் முடித்து, கூரை வேட்டி சட்டையை கொடுத்து மாற்றி வரச்சொல்லி அனுப்பினார் ஐயர்..
அனைவரின் முகத்திலும் அளவற்ற மகிழ்ச்சி.. வாண்டுகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருக்க, உற்றார் உறவினர்கள் ஆங்காங்கே குழு குழுவாக அமர்ந்து சந்தோஷ அரட்டை நடத்திக்கொன்டிருந்தார்கள்.
வித்யாவின் தாய் தந்தை முகத்தில் அப்படி ஒரு சந்தோசம், இருக்காதா பின்னே.. தங்களின் ஒரே செல்ல மகளின் திருமணம் வெகு சிறப்பாக இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போகிறதே...


----

வித்யா சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொன்டு, மீன்டும் தொடர்ந்தாள்..
.. அப்பாவுக்கு பயந்து நீயும் என் காதலை எதிர்ப்பாய் என்பதால் தான் அம்மா உன்னிடம் கூட நான் இது பற்றி வாய் திறக்கவில்லை..மன்னித்து விடும்மா.. அப்பாவை எதிர்க்கவும் முடியவில்லை, 5 வருடம் காதலித்த மாமவை விட்டு வேறொருவரை திருமணம் செய்யவும் மனது வரவில்லை.. ஆகவே என் உயிரை.....

----- -----------

என்னடி அது ... அம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் வித்யா..

அம்மா .. அது..... வாய் குழறினாள்..

ஒரு பத்து நிமிஷம் விட்டுட்டு போனா போதும், உடனே அந்த பாழான போன கத புஸ்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிசுடுரே.. இன்னைக்கு ஒரு நாளாச்சும் படிக்கறதை நிறுத்தக்கூடாதா.... பாவம்டீ உன் மாமன்.. உனக்கு கத புஸ்த்தகம் வாங்கிக்கொடுத்தே ஏழையா போயிடுவான்.. சொல்லிக்கொண்டே வித்யாவின் கையில் இருந்த அந்த நாவலை பிடுங்கினாள்.

அம்மா அம்மா.. கடைசி பக்கம் வந்துட்டேன் மா... இன்னும் என்னை கூப்பிட 10 நிமிசம் இருக்குதுமா.. அதுக்குள்ளே படிச்சுடுறேன்மா...கெஞ்சினாள் வித்யா.. வாக்குவாதம் நடக்கும் போதே, கல்யாண பொண்ணை கூட்டிண்டு வாங்கோ.. ஐயர் குரல் கேட்டது....

தான் படித்த கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று எண்ணத்துடன், தன் ஆசை முறை மாமன் சுகுமாரை மணந்துகொள்ள மனம் நிறைந்த சந்தோஷத்துடன் மணமேடை நோக்கி மெள்ள நடந்தாள் வித்யா..

Sunday, November 18, 2007

மஸ்தானா மஸ்தானா-மானாட மயிலாட-ஜோடி நெ 1

தமிழ் தொலைக்காட்சிகளில் இப்போது பரபரப்பாக போகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சின்னத்திரை நட்சத்திரங்களை வைத்து நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகள்.

விஜய் ல் ஜோடி நெ 1 ,
சன் ல் மஸ்தானா மஸ்தானா
கலைஞர் ல் மானாட மயிலாட..

இந்த நிகழ்ச்சிகளில் பல அபத்தங்கள் உள்ளது . . அது பற்றிய பதிவு இல்லை இது..

போட்டி என்னவோ விஜய்க்கும் கலைஞர்க்கும் தான்.. இருந்தாலும் சன் ம் இந்த வாக்கெடுப்பில் சேர்த்துள்ளேன் . வாக்களியுங்களேன்
----------------------------