Monday, February 9, 2009

வைகோ பாவம் சார்.

கருணாநிதி அனைவரும் ஒன்று சேர்ந்து போரடலாம், குறிப்பாக அ தி மு க , ம தி மு க வும் இனையவேண்டும் என்று 2 நாட்களுக்கு முன் ஒரு அறிக்கை விட்டார் (வழக்கம் போல், கலைஞரின் வார்த்தை விளையாட்டு அறிக்கை தான்), உண்மையிலே கூப்பிட்டது போல தெரியவில்லை, நானும் கூப்பிடுகிறேன் என்ற அளவில் கூப்பிட்டு வைத்தார்.

நான் நீ என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்று வசனம் எழுதி அனைத்து பேருந்துக்களிலும் ஒட்டி வைக்க சொல்லிவிட்டு இப்படி கூட கூப்பிடவில்லை என்றால் எப்படி;..

அந்த அறிக்கைக்கு அம்மாவையும் முந்திக்கொண்டு வைகோவிடம் இருந்து அறிக்கை வந்தது.. எப்படி ஒட்ட முடியும். மத்திய காங்கிரஸ் அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்துகிறது, இலங்கைக்கு உதவுகிறது, அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் தி மு கவோடு எப்படி இணங்கிப்போக முடியும் என்று ஒரு அறிக்கைவிட்டுள்ளார்.. இந்த அழைப்பு நிராகரிக்கப்படுகிறது. என்பது போல பதிலளித்துள்ளார்..

நான் கூட ம தி மு க வின் நிலையை தெளிவுப்படுத்தி அறிக்கை என்று பார்த்தால் , அவர் தெளிவாக அ தி மு க விற்கு கருணாநிதி கொடுத்த அழைப்பை பற்றித்தான் அதிகம் தன் அறிக்கையில் பேசியிருக்கிறார்.. அய்யோ அய்யோ..

அதி மு க கூட ரொம்ப ஒன்றிவிட்டாரோ.. ஒரு வேளை ம தி மு க , அ தி மு க வின் கிளைக்கழகமோ???

இல்லை.. எங்கே கருணாநிதி அழைப்பை ஏற்று ஒரு வேளை ஜெ சரியென்றால்., இவர் நிலை திருசங்கு நிலை ஆகிடுமோ என அ தி மு க வுக்கும் சேர்த்து இவரே பதிலளித்துவிட்டாரோ??

சரி, இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு நிர்பந்திக்காத காங்கிரஸுடன் கருணாநிதி கூட்டணியில் இருக்கிறார்.. இவரின் இந்த ஆதங்கம் புரிகிறது.. கருணாநிதி ஓட்டரசியல் செய்கிறார்.

ஆனால்

"போர் என்றால் அப்படித்தான் இழப்பு இருக்கும்"
"இலங்கை ராணுவம் ஒன்றும் தமிழர்களை கொல்லவில்லை",
"புலிகள் தான் தமிழர் சாவுக்கு காரணம்".
"புலிகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்"

என்று அறிக்கை கொடுக்கும் ஜெ விற்கு பக்க பலமாக இவர் இருந்துக்கொண்டு, ஜெ வின் அறிக்கைக்கு ஒரு மறுப்பு கூட தெரிவிக்காமல், உண்மையான உணர்விருந்தும் ஓட்டு அரசியலுக்காக ஜெ வுடன் ஒட்டுண்ணியாக இருக்கும் இவர் மற்றவர்களின் நிலை பற்றி பேச என்ன இருக்கிறது..?

1 comment:

Anonymous said...

தமிழகத்து அரசியல்வாதிகளைப் பார்த்து அனைத்து இந்தியாவும் சிரிக்கிறது.
40 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு இப்படி நாய்களாக அலைகிறார்களே.
சிங்களவன் சரியாகத்தான் சொன்னான் கோமாளிகள் என்று.
இந்தியாவின் சிண்டைப் பிடித்து ஆட்டாமல் அவரவர்கள் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்துக் குரங்குகளே வெட்கப் படுகின்றனவாம்.